சூடு பிடித்த டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல்… தெலங்கானா முதல்வர் மகளின் மாஜி ஆடிட்டர் கைது- அடுத்து சிக்கும் கவிதா..!

டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு சூடுபிடித்துள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகளான எம்எல்சி கவிதாவின் பெயர் சிக்கியுள்ளது. இவரிடம் கடந்த டிசம்பரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தான் கவிதாவின் முன்னாள் ஆடிட்டரான சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் புச்சி பாபுவை சிபிஐ அதிகாரிகள் தற்போது அதிரடியாக கைது செய்தனர். இதனால் விரைவில் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவும் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லியில் ஆம்ஆத்மி அரசு சார்பில் 2021 நவம்பரில் இந்த புதிய மதுபான கொள்கை அமலுக்கு வந்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு 2022 ஜூலையில் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர். விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணையின்போது தான் டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தெலங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்”சவுத் குரூப்” என்ற தொழிலதிபர்கள் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த குழுவினர் ஆம்ஆத்மி தலைவர்களுக்கு ரூ.100 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணையில் குதித்தது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் விஜய் நாயர் இதனை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குழுவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின்(கேசிஆர்) மகளும், எம்எல்சியுமான கவிதா மற்றும் அக்கட்சியின் எம்பி இருப்பது தெரியவந்தது. மேலும் கவிதா தான் அந்த தொழிலதிபர்கள் குழுவை கட்டுப்படுத்துவதாக தகவல்கள் பரவின.

இதையடுத்து டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிபிஐயின் பார்வை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் மீது திரும்பியது. இந்த வழக்கில் கவிதாவிடம் டிசம்பர் 12ம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சில முக்கிய தகவல்களை அதிகாரிகள் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு 2022 ஜூலையில் திரும்ப பெற்றது. இருப்பினும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர். விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ‘சவுத்குரூப்’ எனும் தொழிலதிபர்கள் குழுவினர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கும், டெல்லி குழுவுக்கும் இடையே பாலமாக முக்கிய நபராக புச்சிபாபு செயல்பட்டதாக கருதப்படுகிறது. தெலங்கானாவை சேர்ந்த மொத்த மற்றும் சில்லரை தொழிலதிபர்கள் பலன் பெறும் வகையில் உரிமம் பெற்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தான் புச்சி பாபுவை விசாரணைக்கு ஆஜராக கோரி சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதில் அவர் பங்கேற்ற நிலையில் முறையாக பதில் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரையில் ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கு நெருக்கமானவர்களை சிபிஐ கைது செய்து வந்தது. தற்போது முதல் முறையாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரசேகரராவின் மகள் கவிதாவின் முன்னாள் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு விரைவில் சந்திரசேகரராவின் மகள் கவிதா கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என பாஜகவினர் கூறி வருகின்றனர்.