டெல்லி வாலிபரை மிரட்டி செல்போன்,பணம் வழிப்பறி- 3 பேருக்கு வலை..!

கோவை : டெல்லியை சேர்ந்தவர் பீரேந்திர சிங் ( வயது 28)எலெக்ட்ரிசியன்’ இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் எலக்ட்ரீசியன் வேலைக்காக வந்திருந்தார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நடந்து சென்றார். அப்போது இவரை 3 பேர் வழிமறித்தனர் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், கிரெடிட் கார்டு,ஏடிஎம் கார்டு பணம் ரூ 6ஆயிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து பீரேந்திர சிங் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்கள்.