பெண்ணிடம் தங்கம் என நினைத்து கோல்டு கவரிங் நகையை பறித்து ஏமாந்த திருடன்..!

கோவை ரத்தினபுரி 7 – வது வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமி .இவரது மனைவி கலா . டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காந்திபுரம் 5-வது வீதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவர் கழுத்தில் செயினை பறித்தார். அது கோல்டு  கவரிங் என்று தெரிந்ததும் ஆத்திரத்தில் தூக்கி எரிந்து விட்டார்.இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.