இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல். வாலிபர் கைது.

கோவை செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டைசேர்ந்தவர் ஆரோக்கியம்.அவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 22)இவர் இன்ஸ்டாகிராமில் ரவுடித்தனத்தை தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்து வந்தாராம். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தங்கம் விசாரணை நடத்தி சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தார். இவர் மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.