கோவையை அடுத்த கிணத்துக்கடவில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே நேற்று ஆட்டோ டிரைவர்கள் தகராறு செய்வதாக கிணத்துக்கடவு போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ்காரர் பிரபாகரன் அங்கு சென்று தகராறு செய்த ஆட்டோ டிரைவர்களை கண்டித்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் கார்த்திகேயன், ஆனந்தன், செந்தில்குமார் ஆகியோர் போலீஸ்காரர் பிரபாகரனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு ,கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து பிரபாகர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் ஆட்டோ டிரைவர்கள் தலை மறைவாகி விட்டார்கள். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர்கள் கார்த்திகேயன் ஆனந்தன், செந்தில்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியரை தடுத்தல் உட்பட 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0