கோவை கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – பாதிரியார் மீது வழக்குபதிவு.!!

கோவை டாட்டா பாத் அழகப்பா ரோட்டை சேர்ந்தவர் சாக்ரடீஸ்.வழக்கறிஞர்.. இவர் நேற்று உப்பிப்பாளையம் இம்மானுவேல்ஆலய வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது முன்னாள் பாதிரியார்சார்லஸ் சாம்ராஜ் அங்கு வந்தார். அவர் வழக்கறிஞர் சாக்ரடிசை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முன்னாள் பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ் மீது கொலை மிரட்டல்,உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்..