பெண் போலீஸ் அதிகாரிக்கு கொலை மிரட்டல். பா.ம.க. பிரமுகர் மீது வழக்கு.

கோவை கணபதி புதூர் 8-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அசோக் ஸ்ரீநிதி ( வயது 35) பாமக பிரமுகர். இவர் யூடியூபில் தனக்கு மிரட்டல் வந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.. அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டது…அதில் கடலூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு,நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமினில் வெளியே வந்து விட்டார்.இந்த நிலையில் அசோக் ஸ்ரீநிதி நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத் திற்கு சென்றார்.அங்கிருந்த பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யாவிடம் தனக்கு மிரட்டல் விடுத்த நபர் எப்படி ஜாமினில் வெளியே வரலாம்?அவர் மீது ஜாமினில் வெளி வராத வழக்கு பதிவு செய்திருந்தால் அவர் வெளியே வந்திருப்பாரா என்று கூறி மிரட்டி னாராம்.அங்கிருந்த சில பேப்பர்களை கிழித்தெறிந்தாராம்.இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் பாமக பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி மீது 4பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.