மகள் காதல் திருமணம். தந்தை தூக்கு போட்டு தற்கொலை .

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 47) அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வாட்டர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவரது மூத்த மகள் கடந்த சில நாட்களுக்கு முன்திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் வெறுப்படைந்த ரங்கராஜ் மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த அவரது மனைவி புஷ்பா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.