டாஸ்மாக் பாரில் புகுந்து கேஷியரிடம் பணம் கொள்ளை. 3 பேர் கைது

கோவை: செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் பாருக்கு நேற்று 3 பேர் சென்றனர். அவர்கள் பார் ஊழியரிடமும் அங்கு மது அருந்த வந்தவர்களிடமும் தகராறு செய்தனர்..பின்னர்பார் ஊழியர் ரித்திக் (வயது 22) என்பவரை கத்தியை காட்டி மிரட்டிஅவரிடம் இருந்த600 ரூபாயை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்துரித்திக் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த குமார வடிவேல் ( வயது 40) செட்டி வீதியைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 24) கெம்பட்டி காலனி எல்.ஜி. தோட்டத்தைச் சேர்ந்த சரண்குமார் ( வயது 23) ஆகியோரை கைது செய்தார். இவர்களிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.