அடடா! செம சூப்பர்!! ஒடிசாவில் தங்க புதையல் இருக்கு – இந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்..!

டிசாவின் மூன்று மாவட்டங்களில் பல இடங்களில் தங்க படிமங்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்டீல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரபுல்லா மல்லிக் அம்மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் தியோகார், கியோஞ்சார் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களில் தங்கம் படிம இருப்பு இருப்பதை இந்திய சுரங்க மற்றும் புவியியல் ஆய்வு இயக்குநரகத்தின் (ஜிஎஸ்ஐ) ஆய்வுகள் உறுதி செய்துள்ளது என்று தேன்கனல் பகுதி எம்எல்ஏ சுதிர் குமார் சமலின் கேள்விக்கு அமைச்சர் பிரபுல்லா மல்லிக் பதிலளித்துள்ளார்.

இந்தியாவை பொருத்த வரையில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்க்கு வெளிநாட்டு இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்கும் வேளையில், ஒடிசா மாநிலத்தில் மட்டும் 3 மாநிலத்தில் பல தங்க படிமம் இருப்பதை கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது ஜாக்பாட் ஆக உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மூன்று மாவட்டங்களிலும் தங்க படிமம் இருப்பு உள்ளது என்ற அறிவிப்பு அம்மாநில சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து கியோஞ்சர், மயூர்பஞ்ச் மற்றும் தியோகர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் மக்கள் மத்தியில் எந்த பகுதியில் எல்லாம் இருக்கும் என ஆர்வம் அதிகரித்த வேளையில் இதற்கான பதிலும் கிடைத்துள்ளது.

கியோஞ்சர் மாவட்டத்தின் திமிரிமுண்டா, குஷாகலா, கோட்டிபூர் மற்றும் கோபூர் ஆகிய இடங்களிலும், மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ஜோஷிபூர், சூரியகுடா, ருவான்சிலா மற்றும் துசுரா மலை பகுதியிலும், தியோகர் மாவட்டத்தின் அடாஸ் பகுதியிலும் தங்க படிம இருப்பு உள்ளது என இந்திய சுரங்க மற்றும் புவியியல் ஆய்வு இயக்குநரகத்தின் ஆய்வுகள் கூறப்படுவதாக ஒடிசா மாநில சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

1980களில் கியோஞ்சர் மாவட்டத்தில் தங்க படிமம் இருப்பதாக முதல் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) அந்த நேரத்தில் இருந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கியோஞ்சர் மாவட்டத்தின் பானசபால் தொகுதியில் உள்ள தாரமகாந்த் மற்றும் நாயக்கோட் பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட குஷாகலா, கோபூர் மற்றும் ஜலதிஹா போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டது.

ஆனால் இந்த ஆய்வின் முடிவுகளை அரசு ரகசியமாகவே வைத்திருந்தது. இதன் பின்னர், 2021-2022ல், கியோஞ்சர் மாவட்டத்தில்மிகவும் புதுப்பித்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி GSI மற்றொரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவுகளையும் GSI அதிகாரிகள் ரகசியம் காத்தனர்.