தாய்க்கு அரிவாள் வெட்டு. மகன் கைது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி தேவி (வயது 40 )இவரது மகன் சுந்தரம் ( வயது 21) இவர் குடிப்பழக்கம். உடையவர்தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுந்தரம்அவரது தாயார்தேவியிடம்பணம் கேட்டு தகராறு செய்தார்,பின்னர் அவரை அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்கு பதிவு செய்து சுந்தரத்தை கைது செய்தார்.