கோவையை அடுத்த வீரகேரளம்பக்கம் உள்ள பொங்காளியூர், பாலகணேசபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சாந்தி (வயது 54)நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசிக்கும் இவரது மகள் ரேவதி ( வயது 31)அங்கு வந்தார். தாயாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கி, காலால் எட்டி உதைத்தார்.பின்னர் அவர் தப்பி ஓடிவிட்டார்.இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து தாயார் சாந்தி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் ரேவதி மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.இவர் ஏற்கனவே 3தடவை திருமணம் செய்துவிட்டு கணவரை விட்டு பிரிந்து 4 -வதாக ரஞ்சித் என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0