திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம்.!

ந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வைணவக் கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.

இந்த கோவிலுக்கு வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செய்து விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இருப்பினும் கடந்த வாரம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு குறைந்த அளவு பக்தர்கள் தான் வருகை புரிந்தனர். ஆனால், நேற்று முன்தினம் ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி எனும் ஒரு நாள் பிரமோற்சவ விழா நடைபெற்றது.

அன்று ஏழுமலையான் ஏழு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் உலா வருவதை காண்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்த வண்ணம் இருந்தனர். அதிக கூட்டத்தின் காரணமாக ஏழுமலையானை தரிசிப்பதற்காக பக்தர்கள் சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. கோவிலில் பக்தர்களின் கூட்டம் துளி அளவும் குறையாததால் வைகுந்தம் காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளிலும் நிரம்பியுள்ளன.

மேலும், திருப்பதியில் நேற்று மட்டும் 78,639 பேர் தரிசனம் செய்தனர். அவர்களில் 25,131 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ 4.16 கோடி வசூலானது.