கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களிலும் கள்ள சந்தையில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.இதையடுத்துகுனியமுத்தூர் போலீசார்கோவைப்புதூர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 38 மது பாட்டில்களும்,மது விற்ற பணம் 2510 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக பார் ஊழியர் கார்த்திக் ( வயது 33)கைது செய்யப்பட்டார்.இதே போல உக்கடம், ராஜா தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் நடந்த சோதனையில் 48 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சப்ளையர் புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூரை சேர்ந்தசிதம்பரம் ( வயது 52)கைது செய்யப்பட்டார். இதே போல ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவிலக்கு அமல் பிரிவுபோலீசார் நடத்திய சோதனையில் கள்ளத்தனமாக மது விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம்,கடலாடியைச் சேர்ந்த ராஜா (வயது 36 )கைது செய்யப்பட்டார் .81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0