கள்ள சாராய சாவு எதிரொலி.கோவை மாவட்டத்தில் தீவிர வேட்டை.1902 மது பாட்டில் பறிமுதல். 98 பேர் கைது.

கோவை: கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 39பேர் பலியானார்கள் அல்லவா?இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடந்து வருகிறது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 6 சப் டிவிஷன் ( உட்கோட்டங்கள்) உள்ளன. ஒவ்வொரு உட்கோட்டத்திலும்ஒரு டி .எஸ் . பி . தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு நேற்று முதல் தீவிரசோதனை நடந்து வருகிறது. இன்று காலை வரை நடந்த சோதனையில் 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 98 பேர் கைது செய்யப்பட்டனர் .1092 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .23 லிட்டர் கள் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் கலப்படமதுவா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது .இவ்வாறு .அவர் கூறினார்.