மயங்கி விழுந்து மாநகராட்சி தொழிலாளி சாவு.

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள வீர மாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மதன் (வயது 55, ) மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று சரவணம்பட்டி இ.பி. காலனி அருகேசக தொழிலாளிகளுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடிரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.