கோவை, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்டஇளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சந்திராபுரம் பகுதியைசேர்ந்த சுரேஷ்குமார் (வயது 39)என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள கந்தசாமி என்பவர் ரூ 1கோடி 59 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை எடுத்துள்ளார்.. பணியை முடித்து கொடுத்ததும் பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். சாலைபணிக்கான பில் தொகையை வழங்க எம். பாஸ் புத்தகத்தில் பதிவு செய்து ஒப்பந்தம் தெரிவிப்பதற்கு ரூ 2 லட்சம் வழங்க வேண்டும் என்று இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் லஞ்சம் கேட்டுள்ளார் .முதல் கட்டமாக ரூ 1லட்சம் கொடுத்துள்ளார். அதன் பிறகு மீதம் ரூ,1 லட்சத்தை தர வேண்டும் என்று சுரேஷ் குமார் கேட்டுள்ளார் .இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரர் கந்தசாமி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ்துணை சூப் பிரண்டு ராஜேஷ் மேற் பார்வையில் இன்ஸ்பெக்டர் சசி லேகா தலைமையில் போலீசார் ரசாயன பொடி தடவிய பணத்தை ஒப்பந்ததாரிடம் கொடுத்து அனுப்பினர்..நேற்று மாலை கந்தசாமி இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சுரேஷ்குமாரிடம் ரூ 1 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை சுரேஷ்குமார் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுரேஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0