கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையே நொய்யல் ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பாலம் பழுதடைந்திருந்த நிலையில் அருகிலேயே மற்றொரு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோவையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளலூரில் உள்ள தரப்பாலத்தின் மீது ஆற்று நீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சமடைந்துள்ளனர்.
சிங்காநல்லூரியில் இருந்து வெள்ளலூர் செல்லும் பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில் தரைப்பாலம் அவ்வப்போது ஆற்று நீரில் மூழ்கிவிடுவதால் குறித்த நேரத்திற்குள் பயணிக்க முடியமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நேற்று பெய்த மழையில் தரைப்பாலம் மூழ்கும் அளவுக்கு நொய்யலில் தண்ணீர் சென்றது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது வெள்ளலூரில் மேம்பாலம் விரைந்து அமைக்க 13 மக்கள் கோரிக்கை வைத்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0