திருவனந்தபுரம்: கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று(டிச.,29) அதிரடி சோதனை மேற்கொண்டனர்.தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல், நிதி திரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.நாடு முழுதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையின்போது, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து போதிய ஆதாரங்கள் அடிப்படையில் இந்த அமைப்புக்கு செப்.28ல் மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தொடர்புடைய 56 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று(டிச.,29) அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் 6 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.