நீலகிரி அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதை குறித்து ஆலோசனைக் கூட்டம்..!

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்..
மேட்டுப்பாலையத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் முகாம் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ. அ.ரவி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கூட்டத்தில் எதிர்வரும் 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை மேட்டுப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யபட்டது, கூட்டத்தில் மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் தொண்டர்கள்
கலந்து கொண்டனர்,.