தீவிரவாதத்துக்கு துணை நிற்கும் காங்கிரஸ்…’தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேச்சு..!

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று  (மே 5, வெள்ளிக்கிழமை) பெல்லாரி பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த திரைப்படம், பயங்கரவாதத்தின் உண்மையைக் காட்டுகிறது மற்றும் பயங்கரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது என ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் குறித்து பிரதமர் புழந்து பேசினார். அதேநேரத்தில் தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தீவிரவாதம் போக்கோடு நிற்பதாகவும், வாக்கு வங்கிக்காக தீவரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாகத் தாக்கி பேசினார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தி கேரளா ஸ்டோரி படம் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அந்த டீசரில், கேரளாவை சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியததை அடுத்து, இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவரின் கடின உழைப்பு இருக்கிறது எனக்கூறி, இந்த படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ படம் குரித்ட வழக்கை இன்று விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேபோல நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்றங்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்த வழக்கு நிலுவையில் இருப்பதை மேற்கோள்காட்டி திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘தி கேரளா ஸ்டோரி’ குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் வெறுப்பு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளனர். இதுபோன்று எதுவும் கேரளாவில் நடக்கவில்லை எனப் பதிவிட்டுள்ளார். ” என்று கூறி சங் பரிவாரை கடுமையாக விமர்சித்தார்.