கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ்கட்சியினர் மோதல்.. மயூரா ஜெயக்குமார் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார். 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

கோவை; தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் கோவை செல்வன் ( வயது 59) கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும், ஐ. என் .டி.யூ சி தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும், தேசிய பேப்பர் மில் தலைவராகவும் இருந்து வருகிறேன்.நான் கடந்த 17ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணு கோபால் பாலக்காட்டில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு மும்பை செல்வதற்காக வருகை புரிந்தார். அவரை கோவை விமான நிலையத்திற்கு சென்று மரியாதை நிமித்தமாகவழி அனுப்பி வைப்பதற்காக நானும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகள் சென்றோம் .இரவு 10 மணி அளவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திரு .கே . சி. வேணுகோபாலை கோவை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு நானும் மாநில மாவட்ட நிர்வாகிகளும் விமான நிலையத்திற்கு வெளியே வரும் போது மயூரா ஜெயக்குமார் அவருடன் தமிழ்ச்செல்வன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் வேண்டுமென்றே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசினார்கள். அப்போது கோவை விமான நிலையத்தில்பாதுகாப்பு பணியில் இருந்தமத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எங்களை சுற்றி பாதுகாப்பு அரணாக நின்றார்கள். அப்போது மயூரா ஜெயக்குமார் என்னை நோக்கி வேகமாக தாக்குவதற்கு கையை ஓங்கி கொண்டு வந்தார். மேலும் கெட்ட வார்த் தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.மயூரா ஜெயக்குமாரிடம் கைதுப்பாக்கி உள்ளது.என்னையும் என்னுடன் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில,மாவட்ட நிர்வா கிகளையும், பெண்களையும் கெட்ட வார்த்தைகள் திட்டி ,கொலை மிரட்டல் விடுத்த மயூரா ஜெயக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இது தொடர்பாக பீளமேடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்மீனாட்சி சுந்தரம் விசாரணை நடத்தி மயூரா ஜெயக்குமார் மீதுஇந்திய தண்டனைச் சட்டம் 294 பி, (கெட்ட வார்த்தைகளால் திட்டுதல்) 323 (தாக்குதல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது.