மணிப்பூரில் நடந்த அநீதியை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை சார்பாக வேலூரில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.!!

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே காமராஜர் சிலை முன்பு மணிப்பூரில் நடந்த அநீதியை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறை சார்பாக வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டி.நோபல் லிவிங்ஸ்டன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில ஒருங்கிணைப்பாளர் தினகரன், ஓபிசி மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.ரவி, மண்டல தலைவர் பாலகுமார், ராஜசேகர், குணா, முத்து, ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதில் விருத்தம்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.