திருச்சியில் சாலை பணியாளர்கள் சங்கு ஊதி போராட்டம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சியில் உள்ள நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மண்டல அளவில் சங்கொலி முழக்க போராட்டம் நடைபெற்றது போராட்டத்துக்கு மாவட்ட தலைவர்கள் ஜீவானந்தம் திருச்சி கருப்பையா புதுக்கோட்டை ஜனநாதன் தஞ்சை மகாலிங்கம் திருவாரூர் கணேசன், நாகை ரமேஷ் மயிலாடுதுறை மற்றும் பொருளாளர்கள் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர்கள் கோரிக்கைகளை விளக்கி பேசினர் மாநில துணைத்தலைவர் மகேந்திரன் நிறைவுறை யாற்றினார் போராட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை ஐகோர்ட் உத்தரவுன்படி பனிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் சாலை பணியாளருக்கு தொழில்நுட்ப கல்வி தரும் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் 4000 பணியிடங்களை ஒழிக்காமல் கிராம புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பனி காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்துப்படி சீருடை சலவைப்படி நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் சாலை பணியாளர்களின் முன்னிலை பட்டியல் முறைகேடாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க காரணமான முதன்மை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன இதில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.