திருச்சியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகர் பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் புகார் அளித்தனர் இதை அடுத்து மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொது மக்களிடம் தவறு எங்கு நடந்துள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது அடுத்து வரும் நாட்களில் குடிநீர் கலங்கலாக வருவதை சரி செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் அன்பழகன் உறுதியளித்த பின்னர் தாராநல்லூர் வசந்தா நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணியையும் 20 வது வார்டு பூலோகநாதர் கோவில் தெருவில் உள்ள புதிதாக நியாய விலை கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களிடம் குழாயில் வந்த குடிநீரை வாங்கிப் பார்த்து அதில் மாசு கலந்துள்ளதா துர்நாற்றம் அடிக்கிறதா என பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மேயர் பொது மக்களிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் வெகு சீக்கிரத்தில் குடிநீர் சுகாதாரமாக வரும் என்று உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது நகர பொறியாளர் சிவபாதம். செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் உதவி ஆணையர் சாலை தவலன் மற்றும் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டு மேயரே அதிகாரிகளுடன் நேரடியாக வந்து குடிநீரை சோதனை செய்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0