சென்னை வில்லிவாக்கம் ராம மந்திரம் தெருவை சேர்ந்த ரத்தனகோபால் மகன் சங்கர நாராயணன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்தை மக்கள் குறைகேட்பு அன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக 23 வருடங்களாக வேலை செய்து வருகிறேன் எனது தாயார் அபூர்வம் ரத்னகோபால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தாயகம் திரும்பி விட்டேன் எனது தாயார் அபூர்வம் ஸ்ரீ பெருமந்தூர் தாலுக்கா வடகால் பகுதியில் 108 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார் அந்த நிலத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் எனது பெயரில் உயில் சாசனம் எழுதி வைத்திருந்தார் அந்த நிலத்தில் நானும் எனது தங்கை சுந்தரியும் சேர்ந்து சொந்தமாக தொழில் செய்ய அபூர்வா ரியல் டர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினோம் இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எனது தாயார் உடல்நிலை மோசம் அடையவே இறந்துவிட்டார் இந்த நிலையில் ஸ்ரீ பெருமந்தூர் நில அளவையர் மூலம் நிலத்தை அளந்து பார்த்த போது 1 ஏக்கர் 8 சென்ட் நிலத்தில் சுமார் 8 முதல் 4 சென்ட் வரை நிலத்தை பக்கத்து நிலத்தின் உரிமையாளர் நிஷ் கலாவானி மற்றும் அவளது கணவர் தாமஸ் பர்னபாஸ் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உறுதிப்படுத்தி ஸ்ரீ பெருமந்தூர் தாசில்தார் அறிக்கை அளித்துள்ளார் மேலே குறிப்பிட்ட அந்த நிலத்தில் புதிய நிறுவனம் தொடங்க உள்ளதால் தாமஸ் பர்ண பாஸ் அவர்களை அணுகி கேட்டபோது அவரும் அவருடன் இருந்த போ ந்தூரைச் சேர்ந்த கருணாகரன் மற்றும் வண்டலூரைச் சேர்ந்த கஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து கொண்டு என்னிடம் நாங்கள் சொல்லும் விலைக்கு நிலத்தை கொடுத்து விடு என்றனர் நானும் அந்த நிலத்தை விலைக்கு கொடுக்க முடியாது ஆக்கிரமி ப்பு செய்துள்ள இடத்தை காலி செய்து கொடுத்து விடுங்கள் எனக்கூறினேன் அவர்களோ ஆக்கிரமிப்பு இடத்தைக் கொடுக்க வேண்டுமென்றால் ரூபாய் 28 லட்சம் கொடுக்க வேண்டுமென கொலை மிரட்டல் விடுத்தனர் கருணாகரன் பரண பாஸ் மற்றும் அவனது மனைவி நி ஸ் கலாவானி அடிக்கடி எனது செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்து வண்ணம் இருந்தனர் அவர்களது மிரட்டலுக்கு பயந்து ஒவ்வொருத்தவனையும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மற்றொருத்தவனை யாக ரூ 5 லட்சமும் வ ங்கில் கணக்கில் போட்டு உள்ளார் பல தவணையாக மொத்தமாக இதுவரை ரூபாய் 35 லட்சத்தை வங்கிக் கணக்கில் போட்டுள்ளேன் ஆனால் இதுவரை என்னுடைய நிலத்தை ஒப்படைக்கவில்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் புகார் கொடுத்துள்ளார் அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் நடவடிக்கை எடுக்க வேண்டி ஒரகடம் காவல் நிலையத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டி ஆணை பிறப்பித்தார்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0