கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், சின்னான் வீதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகள் சத்யா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் நவீன் ( வயது 23 )என்பவர் சத்யாவுக்கு தெரியாமல்ஜன்னல் வழியாக வீடியோ எடுத்தாராம். இதை பார்த்து சத்யா சத்தம் போட்டார். அதற்குள் நவீன்அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் வழக்கு பதிவு செய்து நவீனை தேடி வருகிறார்.இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0