மனைவிக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவர் மீது புகார்..!

மனைவிக்கு கொடூரமாக செக்ஸ் தொல்லை கொடுத்த கணவர் மீது வழக்குப்பதிவு. கோவை ஜூலை 21 கோவை அருகே உள்ள சரவணம்பட்டியை சேர்ந்தவர்24 வயது வாலிபர். இவர் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும்அதே பகுதியை சேர்ந்த 23 வயதான எம்.இ பட்டதாரியான இளம் பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி திருமணம் நடந்தது. ‘ தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவர் தனது மனைவியிடம் விருப்பத்துக்குமாறாக செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறதுஇது தொடர்பாக அந்த இளம் பெண் பலமுறை தனது கணவருடன் எடுத்துக் கூறியும் அவர் அதை கேட்கவில்லை .மேலும் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் விற்பனை பிரதிநிதி தனது மனைவியிடம் கொடூரமாக செக்ஸ்உறவு வைத்ததும் தெரிய வந்தது. இதனால் அந்த இளம் பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.அவர்கள் அவரைசமாதானப்படுத்தினார்கள்.இருந்த போதிலும் விற்பனை பிரதிநிதியின் செக்ஸ்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது..இதனால் பொறுமை இழந்த அந்த இளம்பெண் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர்காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனக்கு திருமணம் முடிந்து 8 மாதங்கள் தான் ஆகிறது. தனது கணவர் தன்னிடம் தனது விருப்பத்துக்கு மாறாக கொடூரமாக செக்ஸ்தொல்லை கொடுக்கிறார் . தனது மாமனார் ,.மாமியார், கணவரின் அண்ணன், அண்ணிஆகியோர் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் அந்த விற்பனை பிரதிநிதி மீது மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும், மாமனார் மாமியார், கணவரின் அண்ணன், அண்ணி ஆகியோர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.