திருச்சி வயலூர் சாலையில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த சோதனைச் சாவடி சாலை விரிவாக்கத்தால் இடிக்கப்பட்டது இந்நிலையில், பின்னர் புதியதாக காவல் சோதனை சாவடி எண்.8 அமைப்பதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி இடம் தேர்வு செய்யப்பட்டு, புதியதாக கட்டிடம் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி கட்டிடத்தில், வயலூர் ரோடு வழியாக திருச்சி மாநகருக்குள் வரும் மற்றும் மாநகரிலிருந்து வெளியேறும் வாகனங்களை பதிவு செய்யும் விதமாக 2 நவீன சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்யவும், சாலையில் விபத்துக்களையும், வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் ஒளிரும் வாகனங்களின் ஸ்டிக்கர்களுடன்(Reflective stickers) கூடிய இரும்பு தடுப்பான்களுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த நவீன காவல் சோதனை சாவடி எண்-8-ன் புதிய கட்டிடத்தை, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் காமினி, இச்சோதனை சாவடியில் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்யப்படும். இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-8 செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், திருச்சி மாநகருக்குள் உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியேறும் வாகனங்களை தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை வாகன சோதனை மூலம் கண்டுபிடிக்கவும் உதவும். மேலும் சட்ட விரோதமாக செயல்படும் நபர்களை கண்காணிக்கவும், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உய்யக்கொண்டான் திருமலை, குமரன்நகர், வாசன்சிட்டி, குழுமிக்கரை ஆகிய இடங்களில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்க ஏதுவாக இது அமைந்துள்ளது என்றார். திருச்சி மாநகரத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகருக்குள் நுழையும் வாகனங்களையும், மாநகரை விட்டு வெளியேறும் வாகனங்களையும் தணிக்கை செய்வதற்காக திருச்சி மாநகரத்தின் எல்லைகளை சுற்றி மொத்தம் 9 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ள கொள்ளபட்டு வருகிறது என்று கூறினார். இந்த சோதனை சாவடி ஆனது திருச்சி எல்லையில் இருப்பதால் கடத்தல் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் இனி இருக்காது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள். திருச்சி செய்தியாளர் H. பஷீர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0