கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் எஸ். என் .எஸ் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் இடையே கடந்த ஜூர் மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக கொண்டையம்பாளையம் அருகே உள்ள லட்சுமி கார்னைச் சேர்ந்த ரவி என்ற ரவீந்திரன் (வயது 23 கோவில்பாளையம் காப்பி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சேர்ந்த நந்தகுமார் ( வயது 21) மற்றும் அவரது குழுவினர் செயல்பட்டுள்ளனர். அப்போது இவர்கள் எதிர் தரப்பினரின் இரு சக்கர வாகனத்தையும் திருடினர்.இந்த சம்பவம் தொடர்பாக கோவில் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப், ஜெர்மன் ராகேஷ் கண்ணன், சந்தோஷ், தீபக் ராகுல் ஆகியோரை நடந்த ஜூன் மாதம் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ரவீந்திரன் ,நந்தகுமார் சிராஜுதீன் ,ஆகியோர் தலை மறைவாகி இவர்களை கோவில்பாளையம் போலீசார் தேடிவந்தனர் .சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கோவில்பாளையம் போலீசார் தேடிய போது ரவீந்திரன் நந்தகுமார் ஆகியோர் இமாசல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து கோவில் பாளையம் போலீசார் சிம்லா சென்று அங்கு பங்கிருந்த ரவிந்திரன், நந்தகுமார், சிராஜுதீன் ஆகியோரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரித்த போது குருடம்பாளையம் சாலையில் ஒரு இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தனர் .இதை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் அழைத்துக் கொண்டு நேற்று முன் தினம் குரும்பப் பாளையத்துக்கு சென்றனர் .அப்போது போலீசாரிடமிருந்துமூன்று பேரும் தப்பி ஓட முயன்றனர் அவர்களை துரத்திச் சென்றபோது ரவீந்திரன் நந்தகுமார் ஆகியோர் தவறி கீழே விழுந்ததில் அவர்களது கால்கள் முறிந்தன. இதை யடுத்து அவர்கள் சிகிச்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது ரவுடிகளான ரவீந்திரன் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 9 வழக்குகளும் நந்தகுமார் மீது 8 வழக்குகளும் உள்ளன 20 21 ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ஸ்ரீ ராம் என்ற குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர்களுக்கு தொடர்புள்ளது.. இவ்வழக்கில் தொடர்புடைய கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் என்பவரை அவரது எதிர்தரப்பினர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவை நீதிமன்றம் அருகே சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதில் ரவீந்திரன் குழுவினர் காமராஜர் புறம் கவுதம் தலைமையிலும், கொல்லப்பட்ட குரங்கு ஸ்ரீராம் தரப்பினர் ரத்தினபுரியை சேர்ந்த கவுதம் தலைமையிலும் இயங்கி வந்துள்ளனர் என்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0