கோவையை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு தனது தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நட்பாக பழகினர். மேலும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை தொடர்பு கொண்டு பேசிய சூர்யா நான் உன்னைஉயிருக்கு உயிராக காதலிக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசை யாகஇருக்கிறது. என்று கூறினார் அதற்கு அவர் நான் உன்னிடம் நட்பாக தான் பழகினேன். எனக்கு காதல் பிடிக்காது என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அவரது செல்போன் எண்ணையும் ” பிளாக் ” செய்துவிட்டார். ஆனால் அவர் வேறு செல்போன் எண்களிலிருந்து அந்த மாணவிக்கு தொடர்பு கொண்டு பேசியும், அவர் சரியாக பேசவில்லை. இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி அந்த மாணவி தனது தோழிக்காக கல்லூரி அருகே காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் அங்கு வந்த சூர்யா அந்த மாணவியை சந்தித்து தன்னை காதலிக்கும் படி மிரட்டினார். இது தொடர்பாக மாணவி தனது தம்பியான கல்லூரி மாணவருக்கு செல்போனில் கூறி அழுதார் .உடனே அவர் தனது நண்பர் தருண் மற்றும் சிலருடன் அங்குவந்து சூர்யாவை கண்டித்தார். அப்போது தருண் தகாத வார்த்தைகளால் சூர்யாவை திட்டியதாக கூறப்படுகிறது.இதை யடுத்து சூர்யா அங்கிருந்து சென்று விட்டார் .இந்த நிலையில் அந்த மாணவியின் தம்பி கல்லூரி செல்வதற்காக போத்தனூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு தனது நண்பருடன் காரில் வந்த சூர்யா அவரை கடத்திச் சென்றார். மாணவியின் செல்போனில் தொடர்பு கொண்டு நான் உன் தம்பியை கடத்தி விட்டேன். நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உன் தம்பியைகழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன். உனக்கு தம்பி வேண்டும் என்றால் செட்டிபாளையத்துக்கு வந்து நண்பர் தருணை என்னிடம் ஒப்படைத்து விட்டுஉன் தம்பியை அழைத்துச் செல் என்று கூறி மிரட்டினார்.இதை கேட்ட அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி உடனடியாக தருணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து அந்த மாணவி, தருண் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் செட்டிபாளையத்துக்கு வந்தனர் .அங்கு காரில் வந்த சூர்யா அந்த மாணவி பைதொடர்பு கொண்டு தருணை என்னிடம் ஒப்படைத்து விட்டு உன் தம்பியை அழைத்துச் செல். இல்லை என்றால் இங்கே அவனை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி அழுதுகூச்சலிட்டார். அதை கேட்டு அக்கம் -பக்கம் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் சூர்யா மாணவியின் தம்பியை அங்கே விட்டுவிட்டு காரில் தப்பி சென்று விட்டார். அப்போது மாணவியின் தம்பிக்கு லேசான காயம் இருந்தது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் தனது தம்பியை மீட்டார். இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .அதில் சூர்யா தனது நண்பர்களான வெள்ளலூரைச் சேர்ந்த கலையரசன் ( 29) சிங்காநல்லூரை சேர்ந்த சங்கர் ( 21 ) திருமுருகன் (21) ஆகியோருடன் சேர்ந்து மாணவியின் தம்பியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதை யடுத்து கலையரசன் சங்கர், திருமுருகன், ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடி வருகிறார்கள்.இந்தக் கடத்தல் சம்பவம் அந்தப் பகுதியில் வ பெரும்பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0