கோவை வெள்ளானை பட்டி, குமரன் லே – அவுட்டை சேர்ந்தவர் மதன் (வயது 37) கல்லூரி பேராசிரியர். இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை பார்த்து வர சென்று விட்டார். இருவரும் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில்பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து கோவில் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் திருச்சி மாவட்டம் | நெடுங்கூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் ( வயது 26) என்பவர் தான் திருடியிருப்பது தெரியவந்தது. அவரைபோலீசார் கைது செய்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0