திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் நலன் சார்ந்த அரசு துறை களப்பணியாளர். களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆரம்ப நிலையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஆரம்ப கால பயிற்சிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி னார். மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை மாற்றுத்திறனாளிகள் குழந்தை கள் நலன் சார்ந்த பணியாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி நித்தியா உதவி செயல்படுத்துதல் அலுவலர் ரமேஷ் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் திருச்சிராப்பள்ளி தொண்டு நிறுவன செயலாளர் சுப்பிர மணியன் இயக்குனர் சாந்தகுமார் அறிவுசார் குறைபாடு உடையோர் மறுவாழ்வுக்கான தேசிய நிறுவனத்தின் மறுவாழ்வு அலுவலர் கனகசபாபதி இயன்முறை சிகிச்சையாளர் சுரேந்திரபாபு கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0