கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 77 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திர வாயிலாக மட்டுமின்றி, தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை கேந்திரா வாயிலாகவும் பாஸ்போர்ட் ஆவணங்களை பெறப்படுகிறது. இதற்காக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை குன்னூர் தலைமை தபால் நிலையத்தில் மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
பத்தாம் வகுப்புக்கு கீழ்ப் படித்த 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோருக்கு இ.சி.ஆர் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்தோனேசியா, லிபியா, குவைத், லெபனான், ஈராக், மலேசியா, சூடான், கத்தார், சவுதி, சிரியா யு.ஏ.இ , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வேலை பார்க்க செல்வோர் குடி பெயர்வு துறையின் அனுமதி பெற்ற பிறகு பயணம் செய்ய முடியும். 10 ம் வகுப்புக்கு கீழ்ப் படித்த 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மேற்கண்ட நாடுகளுக்கு செல்பவர்களாக இருந்து வருமான வரி செலுத்துவோராக இருத்தல் இ.சி.என்.ஆர் பாஸ்போர்ட் இமிகிரேஷன் செக்கிங் நாட் ரெக்யூர்டு வழங்கப்படும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகவரி சரிபார்ப்புக்கு மட்டுமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள ரூபாய் 1,500 கட்டணம் ஆன்லைன் வழியாக பெறப்படுகிறது. மேலும் தட்கல் மூலம் பெற கூடுதல் கட்டணமாக ரூபாய் 2000 பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை முழுவதுமாக ஆன்லைன் மூலம் மாற்றும் வகையில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா வெர்ஷன் – 2 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இது தவிர பயண ஆவணங்களின் வெளிப்படை தன்மை மற்றும் பாதுகாப்பை வெளிப்படுத்தும் வகையில் சிப் பதித்து இ பாஸ்போர்ட் வழங்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இது விரைவில் அமலுக்கு வரும். மேலும் பாஸ்போர்ட் நடைமுறைகள் குறித்து அறிய விரும்புவோர் passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.