500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்த கோவை வாலிபர் கைது-டாஸ்மாக் கடையில் மது வாங்கும் போது சிக்கினார்.!

கோவை சுண்டக்காமுத்தூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு நேற்று ஒரு வாலிபர் மது அருந்த சென்றார்..அவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில் கேட்டார் .அந்த ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்ட டாஸ்மாக் ஊழியர் அதனை சரிபார்த்தார். அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது உடனே அவர் மற்ற ஊழியர்கள் உதவியுடன் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி அந்த வாலிபரை கைது செய்தார். விசாரணையில் அவர் கோவை புதூர் அறிவொளிநகரை சேர்ந்த ரமேஷ் ( வயது 20 )என்பது தெரியவந்தது. இந்த கள்ள நோட்டுக்களை கீழே கிடந்து எடுத்ததாக போலீசில் கூறினார். 500 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.ரமேசிடம் மொத்தம் 56 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.ரமேஷ் பொய்யான தகவல்கள் கூறுவதாகவும் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரித்து அதன் பின்னணி என்ன ?என்பதை தெரிந்து கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.