கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் பூவரசன் (வயது 27) இவர்கள் இருவரும் கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர்.சம்பவத்தன்று சித்ரா ஏர்போர்ட் அருகே இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இடைப்பட்ட நேரத்தில் பூவரசன் மது குடிப்பதற்காக ஏர்போர்ட் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார் .அப்போது அவருடன் மேஜையில் அமர்ந்துமது குடித்துக் கொண்டிருந்த 2பேருக்கும் பூவரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பூவரசன் கடையை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து சென்றார் .அப்போது மதுக்கடையில் வாக்குவாதம் செய்த அந்த இருவரும் பூவரசனை கண்டதும் மீண்டும் தகராறு செய்தனர். இருவரும் சேர்ந்து அருகில் கடந்து சிமெண்ட் கல்லை எடுத்து பூவர சன் தலையில் தாக்கினார்கள். இதில்பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிவு செய்து கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சாம்நாத் (வயது 24) பிரணவ் ( வயது 21)ஆகியோரை கைது செய்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பூவரசன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0