Mid section of female doctor writing prescription to patient at worktable.

கோவை பெண் டாக்டரிடம் நூதன முறையில் ரூ.19 லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு ..!

கோவை பெண் டாக்டரிடம்நூதன முறையில் ரூ.19 லட்சம் மோசடி. சைபர் கிரைம்போலீசில் புகார் .

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 32 வயது பெண் . இவர் மனநல டாக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:-நான் கோவையில் மனநல மருத்துவராக உள்ளேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் திருமண தகவல் மையம் வாயிலாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யூஷன் ஜியான் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுவதாக கூறினார். மேலும் அவர் தான் இந்தியாவில் பெரிய அளவில் மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவில் குடியேற போவதாகவும்கூறினார். இதற்காக இந்திய பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதனால் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்தோம் இந்த நிலையில் பெண் ஒருவர் தான் டெல்லி விமான நிலையத்தில் உள்ள சுங்கவரித்துறை அதிகாரி பேசுவதாக தெரிவித்தார். அவர் என்னிடம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யூஷன் ஜியான் ,தனது தாய் மோனிகா ஜியானுடன் வந்திருப்பதாகவும் அவர் ஒரு லட்சம் யூரோ (இந்திய ரூபாய் மதிப்பில் 82 லட்சத்து 51 ஆயிரத்து 48 ரூபாய்) கொண்டு வந்திருப்பதாகவும்,இதற்கு வரியாக 19 லட்சத்து 59 ஆயிரத்து 920 ரூபாய் உடனடியாக அவர் கொடுக்கும் வங்கியில் செலுத்துமாறு கூறினார். இதையடுத்து உடனடியாக பணத்தை தயார் செய்து அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதை யடுத்து நான் யூஷன்ஜியான் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது “சுவிட்ச் ஆப் ” செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் இது மோசடி என்பது தெரியவந்தது இது குறித்து விசாரித்து பணத்தை பெற்று தரவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் பெண் மருத்துவரிடம் நடந்த இந்த நூதனமோசடி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.