கோவை மாநகர வியாபாரிகள் சம்மேளன தலைவர் கோவை கே.ஆர். ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-கோவையில் உள்ள பஸ் நிலையங்கள் ,ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இரவு 10 மணிக்கு ஓட்டல்கள், கடைகளை அடைத்து விடுவதால் நள்ளிரவில் வரும் பயணிகள், குழந்தைகள் உணவு, பால்,கிடைக்காமல் மிகவும் அவதிபடுகிறார்கள்: இதனால் பஸ் நிலையங்கள்,ரயில் நிலையம் அரசு மருத்துவமனை பகுதிகளில் ஓட்டல்கள், கடைகள், பேக்கரிகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகளின் இந்த கோரிக்கையை ஏற்று இதை உடனடியாக அமுல்படுத்திய அரசுக்கும், மாநகர காவல் ஆணையருக்கும், மாநகர காவல்துறைக்கும் நன்றியையும் ,புத்தாண்டு தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறையின் அறிவிப்பின்படி ஓட்டல்கள், பேக்கரிகள், கடைகளுக்கு முன் அனைவரும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0