கோவை பள்ளிக்கூட கலையரங்க சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி. ஒருவர் படுகாயம்.

கோவை பேருர் அருளே உள்ள பச்சாபாளையம் பகுதியில் ” கிக்கானி குளோபல் அகாடமி ” என்ற பள்ளிக்கூடம் உள்ளது..இந்த பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தற்போது இந்த பள்ளியில் கலையரங்கம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது .கட்டுமான பணியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கலையரங்கத்தின் மேலே உள்ள பகுதியில் கான்கிரீட் தூள் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிந்ததால் அங்குள்ள சென்ட்ரிங் பலகைகளை அகற்றுப் பணி நேற்று மாலை நடந்தது . இதில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தூணின் சுவர் திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் சீர்காழி யைச் சேர்ந்த ஜெயராமன் ( வயது 40 )கட்டிட இடுப்பாட்டுக்குள் சிக்கி அதே இடத்தில் இறந்தார். அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம்,ஆதி மணப்புரம் ஆனந்தராஜ் ( வயது 35 படுகாயம் அடைந்தார் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது பற்றி தகவல் தெரிந்ததும்பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கட்டிட ஈடுபாடுகளை அகற்றி ஜெயராமன் உடலை மீட்டனர். இவர்களுடன் பணிபுரிந்து தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கூட கலை அரங்க கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.