கோவை: ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 59 )இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் “டேட்டா “பதிவு ஆபரேட்டராகவேலை பார்த்து வந்தார் .எஸ் . பி . அலுவலகம் அருகே உள்ளவருவாய் ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர். நேற்றுகாலையில் அவரது அறையில் தங்கி உள்ளஅறிவழகன் அவரை எழுப்பிய போது எழுந்திருக்கவில்லை இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து அவரது மனைவி சுமிதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்கார்த்திகேய பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0