கோவை மாவட்டம் குன்னத்தூர் புதூரில் வசித்து வருபவர் மகேந்திர பிரபு. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தனது தந்தையின் நிலத்தை அளந்து வரைபடம் தர வேண்டும் என்று கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு வருவாய் துணை ஆய்வாளர் பொன்னுசாமி என்பவர் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார் .இது குறித்து மகேந்திர பிரபு கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்தனர். அப்போது மகேந்திர பிரபுவிடம் இருந்து லஞ்சம் பணம் ரூ.15 ஆயிரத்தை வாங்கும் போது வருவாய் துணை ஆய்வாளர் பொன்னுசாமி கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கை விசாரித்து பொன்னுசாமிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.வருவாய் துணை ஆய்வாளர் பொன்னு சாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0