கோவை தனியார் பள்ளிக்கூடத்தில் ரூ. 80 லட்சம் மோசடி. பெண் கவுர ஆலோசகர் மீது வழக்கு

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நிரும மரியதா சைதன்யா என்ற தெய்வானை என்பவர் கவுரவ ஆலோசராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஏழை – எளிய மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் தருவதாக கூறி பள்ளியில் உள்ள பணத்தை தனது வங்கி கணக்கிலும், தாயார் மற்றும் உறவினர் வங்கி கணக்கிலும் செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் வரவு – செலவு கணக்குகளைஆய்வு செய்தனர். அப்போது நிரும மரியதா சைதன்யா ரூ. 80 லட்சம் வரை மோசடி செய்தததுகண்டுபிடிக்கப்பட்டது. .இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் நிரும மரியதா சைதன்யா மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.