கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பணியிடமாற்றம்.

கோவை சரக சிறைத் துறை டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் சண்முகசுந்தரம். இவர் வேலூர் சரகசிறைத்துறை டிஐஜி யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திருச்சிசரக டி ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ஜெயபாரதி கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது.