கோவை மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தவர் அஞ்சலி ( வயது 27 இவர் )2017 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவரது கணவர் பெயர்செல்வகுமார்.ஆசிரியர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. இந்த நிலையில் அஞ்சலி 4 நாள் லீவு எடுத்துக் கொண்டு கணவரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள சூரக்குடிக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கணவருடன் சென்றிருந்தார்..அங்கு வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளையார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0