கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்துவந்தவர் சரவணன் ( வயது 42)கோவை போலீஸ் குடியிருப்பில்மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.அதே ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும்,இவரது நண்பரான ராஜாவுடன்அவரது சொந்த ஊரான தாராபுரம் டி காளிப்பாளையத்துக்கு வந்துள்ளார். நேற்று மதியம் அவர்கள் 2 பேரும் ராஜமங்கலம் பகுதியில் செல்லும் அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர். தொடர்ந்து அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆற்றில் சுழலில் சரவணன் சிக்கிக்கொண்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad1
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0