கோவை போலீஸ் ஏட்டுதிடீர் மரணம்

கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில்போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சுப்பிரமணியம் (வயது 41)இவர் பேரூர் பச்சாபாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இரவு இவருக்கு வீட்டில் வைத்து திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இவர் 2003-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகளும், போலீஸ்காரர்களும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை போலீஸ் மரியாதைகளுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.