கோவை நரசிபுரம் கிராம விளைநிலங்களை சேதப்படுத்திய யானைக்கூட்டம்,விவசாயிகள் அச்சம்!!

கோவை, மேற்கு தொடர்ச்சி மலையின் மலை அடிவார கிராம பகுதியான நரசிபுரம் ஊராட்சி கிராமத்தின் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விளைப்பொருள்களை சேதபடுத்தி வருகின்றது, என்று அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக திரிவதாக கிராம மக்களுக்கும், விளைநிலங்களின் விவசாயிகள் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் மூலம் எச்சரிக்கை விடுத்தனர், இதனிடையே காலையில் வயல் வெளியொட்டி காட்டுபகுதியில் பத்து காட்டு யானைகள் குட்டிகளுடன் சுற்றி திரிந்தது, இவை அப்பகுதி விளைநிலங்களில் இருந்த தென்னை மரங்கள், வாழை மரங்களையும் முட்டி சாய்த்தனர், அதே போல கீரை வகைகளையும், பயிர் வகை செடிகளையும் நாசப்படுத்தியது இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் வருத்ததுடன் தெரிவித்தனர்,காட்டு யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.