கோவை, மதுக்கரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகா, மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் மாலை 5 மணிக்கு மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் 15 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. இதை முறைப்படுத்தி குடிநீர் வினியோகத்தை சீராக வழங்க வேண்டும். என்றும் சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை. அதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். இந்திரா நகர் 60 அடி ரோடு பகுதியில் புதிய சாக்கடை அமைத்து தர வேண்டும். மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் பொதுக் கழிப்பிடம் இல்லாமல் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். புதிதாக கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். பழுதடைந்த சாலைகளுக்கு புதிதாக தார் சாலை அமைத்து தரவும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை வீரன் கோவில் வீதி மக்களுக்கான மயான பாதையில் தெரு விளக்கு வசதி, மயானத்தில் தெருவிளக்கு வசதி. தண்ணீர் வசதி, காத்திருப்பு கூடாரம் அமைத்து மயானத்தை சீராக்கி தர வேண்டும். மலுமிச்சம்பட்டியில் அரசு மருத்துவமனை அமைக்க கோரியும் போக்குவரத்து நிர்வாகம் மலுமிச்சம்பட்டி -போடிபாளையம் வழியாக மதுக்கரைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மதுக்கரையில் தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம் ஒன்றிய அலுவலகம் அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் அதனால் பேருந்து வசதி செய்து தர வேண்டும் திருப்பூர் பல்லடம் மதுக்கரை சாவடி வழியாக பாலக்காடு பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா ஒன்றிய தலைவர் எஸ்.சி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுக்கரை ஒன்றிய குழு செயலாளர் எம். பஞ்சலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.மணி, கே.வரதராஜ், டி.கே.ஆழ்வார், கிளை செயலாளர்கள் கே.சண்முகசுந்தரம், சரஸ்வதி, பி.ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் வெள்ளலூர் கிளைகள் சார்பில் கேரள மாநிலம் வயநாடு நிவாரண நிதி தொகை ரூ 12,000 ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலகுரு, ரங்கநாதன் ஆகியோர் ஒன்றிய செயலாளர் எம்.பஞ்சலிங்கம் அவர்களிடம் வழங்கப்பட்டது.