கோவை சிவானந்தா காலனியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது, அமைப்பின் தர்மாச்சார்யா தென் தமிழக அமைப்பாளர் இல. சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில், வி.ஹெச்.பி மாநில துணைத் தலைவர், என்.பரமசிவம், மாவட்டத் தலைவர் சிவராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பா.ஜ.க இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் பெண்கள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர், ராதை போன்று சிவானந்தா காலனி சாலை வீதியில் மேளதாளத்துடன் ஊர்வலம் நடந்து வந்தனர், இதில் 500 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர் பின்னர் விழா மேடையில் மழலை பேச்சு பேசியும், நடனமாடி பொது மக்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தனர். பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான கோகுலாஷ்டமி விழாவாக நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வரும். இந்த நாளில் விசுவ இந்து பரிசத் அமைப்பு சார்பில் 60-ம் ஆண்டு ஸ்தாபன தினம் நிறைவு விழா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவையும் ஒன்றாக கொண்டாடினர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா மேடையில் தோன்றிய சிறுவர் சிறுமியர் பக்தி பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். அதனைத் தொடர்ந்து குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக மேஜிக் ஷோ நடைபெற்றது. குழந்தைகளை பிரமிக்க வைக்கும் வகையில் மேஜிக் ஷோ செய்து அசத்தினர். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0