கோவை நகை பட்டறையில் ரூ. 40 லட்சம் தங்கம் திருடிய கணவன் – மனைவி கைது.

மதுரை மாவட்டம் மேலூர் பக்கம்உள்ள திருக்கணை சிட்டம்பட்டியை சேர்ந்தவர் ராஜா என்ற பாண்டியராஜன் ( வயது 40)இவர் கோவை ஆர். எஸ். புரம்,காந்தி பார்க், டி.பி. ரோட்டில் பழனிகுமார் என்பவரது தங்கப்பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி உமா என்ற உமா மகேஸ்வரி ( வயது 27) கணவன் – மனைவி இருவரும் வடமதுரை, வி .எஸ் . கே. நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். 9 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பாண்டியராஜன் வேலை செய்து வந்ததால், நகை பட்டறையை இவரை நம்பி விட்டு விட்டு உரிமையாளர் பழனிகுமார் வெளியூர் சென்று விடுவார். இந்த நிலையில் பட்டறையில் உள்ள நகையை திருடி வருமாறும், இருவரும் வெளியூர் சென்று அதனை விற்று ஜாலியாக இருக்கலாம் என்றும் தொழிலாளி பாண்டியராஜனிடம் அவரது மனைவி உமா மகேஸ்வரி கூறினாராம். இதைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பட்டறையில் யாரும் இல்லாத நேரம் 800 கிராம் எடையுள்ளதங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை எடுத்துக்கொண்டு மனைவியை அழைத்துக்கொண்டு பாண்டியராஜன் வெளியூர்தப்பி சென்று விட்டார். இது குறித்து ஆர். எஸ். புரம், போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மேனகா வழக்கு பதிவு செய்து தம்பதியை தேடி வந்தார் .இந்த நிலையில் தப்பி ஓடிய தம்பதி தஞ்சாவூர் அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பாண்டியராஜனையும், அவருடைய மனைவி உமா மகேஸ்வரியையும் கைது செய்து அவர்களிடமிருந்து 800 கிராம் தங்கத்தை மீட்டனர் .இதன் மதிப்பு 40 லட்சம் இருக்கும். கைதான 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.